Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சியின் 3 மாநிலங்களில் பிரதமரின் ஹரிராயா பொது உபசரிப்பா?
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சியின் 3 மாநிலங்களில் பிரதமரின் ஹரிராயா பொது உபசரிப்பா?

Share:

பாஸ் கட்சி தலைமையிலான மூன்று மாநிலங்களில் தமது ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்வை நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில் இதர மாநிலங்களில் நடத்தப்படும் பொது உபசரிப்புகளிலும் பிரதமர் என்ற முறையில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

சிலாங்கூர் உட்பட நிறைய மாநிலங்கள் ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருப்பதால் அவற்றில் தாம் கலந்து சிறப்பிக்கவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியின் கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மூன்று மாநிலங்களில் தம்முடைய ஹரிராயா பொது உபசரிப்பை நடத்தவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதைப் போல அவரை மறைமுகமாக சீண்டியுள்ள பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அமாட் ஃபட்டில் ஷாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News