Sep 26, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து போலீஸ்காரரை மோதிய கார் ஓட்டுநர் – 5 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து போலீஸ்காரரை மோதிய கார் ஓட்டுநர் – 5 நாள் தடுப்புக் காவல்

Share:

ஈப்போ, ஜாலான் சிலிபினில் சாலைத் தடுப்புச் சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்ற கார் மோதியதில் போக்குவரத்து போலீஸ்காரர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக, கார் கழுவும் பணியாளர் ஒருவரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

29 வயது அந்த ஆடவரை, வரும் புதன்கிழமை வரை தடுப்புக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் லாவ் ஏரிக் உத்தரவிட்டார்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 307ஆவது பிரிவு மற்றும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

படுகாயமடைந்த லான்ஸ் கோப்ரல் முஹமட் பாட்ருல் இஸ்வானி பௌஸி, ஈப்போ சன்வே மெடிகல் செண்டர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டதுடன், ஏழு மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தற்போது மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன், வாகனத்தின் சாலை வரியும் காலாவதியாகியிருந்தது. மேலும், ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அவர் நேர்மறையாகப் பதிவாகியுள்ளார்.

Related News