கோலாலம்பூர், நவம்பர்.22-
கோலாலாம்பூரில் இன்று இந்திராகாந்தி நடத்திய அமைதி ஊர்வலத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.
இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தைக் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் சுமார் 60 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது. எந்தவோர் அசம்பாவிதமும் நிகழவில்லை என்று ஏசிபி சஸாலி கூறினார்.
சாலையின் நடுவில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் செல்வதற்குச் சிறிய வழியை ஏற்படுத்தித் தந்தோம்.
இருப்பினும், அவர்களின் இந்த ஊர்வலம் குற்றத்தன்மையானது என்றும் போலீஸ் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு தாங்கள் நினைவூட்டியதாக ஏசிபி சஸாலி குறிப்பிட்டார்.








