ஷா ஆலாம், நவம்பர்.08-
யுனோஸ்கோவின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் நிர்வாக வாரிய உறுப்பினராக மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையின் மூலம் மலேசியா 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.நா.வின் அந்த முக்கிய அமைப்பின் நிர்வாக வாரிய உறுப்பினராக இடம் பெற்று இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக் தெரிவித்தார்.
அண்மையில் Uzbekistan, Samarkand-டில் நடைபெற்ற யுனோஸ்கோவின் 43 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் மலேசியா தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக ஃபட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.








