Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பேத்தியை பாலர் பள்ளிக்கு அனுப்பச் சென்ற பாட்டி கார் விபத்தில் மரணம் !
தற்போதைய செய்திகள்

பேத்தியை பாலர் பள்ளிக்கு அனுப்பச் சென்ற பாட்டி கார் விபத்தில் மரணம் !

Share:

ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான் அருகே உள்ள கம்போங் சங்காட் கின்டிங்இல் உள்ள பாலர் பள்ளிக்கு தமது பேரப் பிள்ளையை அனுப்பச் செல்லும் வழியில் பாட்டி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

59 வயது என் யொக் லின் செலுத்திய பெரோடுவஆ வகை கார், 17 வயது மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த அந்த மாணவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்த 6 வயது பெண் குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்பட வில்லை என தம்பூன் தீயணைப்பு - மீட்புப் படை தலைவர் ஷஹருடின் அப்துல் கானி தெரிவித்தார்.

அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக காயமடைந்த அந்த மாணவனும் 6 வயது பெண் குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related News