Jan 19, 2026
Thisaigal NewsYouTube
9 கோடியே 30 லட்சம் வெள்ளியை அரசு ஏற்கிறது
தற்போதைய செய்திகள்

9 கோடியே 30 லட்சம் வெள்ளியை அரசு ஏற்கிறது

Share:

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, நாட்டின் 33 நெடுஞ்சாலைகளில் 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பது மூலம், இந்த 4 நாட்களுக்கு 9 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பீட்டை அரசாங்கம் ஏற்கிறது என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

நேற்று ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் வரும் திங்கட்கிழமை ஆகிய 4 நாட்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்கமுழுக்க மக்களின் வாழ்க்கை செலவீனத்தைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் அபிலாஷையாகும் என்று அமாட் மஸ்லான் விளக்கினார்.

Related News