Aug 12, 2026
Thisaigal NewsYouTube
சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா?
தற்போதைய செய்திகள்

சந்திரமுகி படத்திற்கு முதலில் தேர்வானது ரஜினி இல்லையா?

Share:

நடிகர் ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி எனத் தாராளமாகக் கூறலாம். 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, வினீத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் கதையே சிறப்பு, பாடல்கள் அதற்கு மேல் பிரபலமாகின. 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை செய்திருந்தது.

இந்த படக் கதையை பி.வாசு முதலில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவை வைத்து தான் உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் இந்தக் கதையை தெலுங்கு ஹீரோ நிராகரித்ததால் ரஜினிக்கு வாய்ப்பு வந்தது. பெரும் வெற்றியடைந்த சந்திரமுகி கதையை நிராகரித்தது எந்த ஹீரோ தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை. தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தானாம்.

Related News