கோலாலம்பூர், ஜூலை.24-
கோலாலம்பூர் மாநகரில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிரதமர் அன்வாருக்கு எதிரான பேரணியில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிகளவில் அதிருப்தி கொண்டு இருப்பதால் இந்த முறை நடைபெறும் பேரணியில் அதிகளவில் மக்கள் கூடுவர் என்று ஹம்ஸா ஸைனுடின் குறிப்பிட்டார்.
நாட்டில் எத்ததகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்று தமது அதிகாரி ஒருவரைக் கேட்ட போது தேர்வு செய்வதற்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன என்று பதில் அளித்து இருப்பதாக ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.








