இம்மாதம் 12 ஆம் தேதி 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்கள் இந்திய வாக்காளர்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 132 சட்டமன்றத் தொகுதிகளில் 76 தொகுதிகளில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமாக இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 76 தொகுதிகளில் உள்ள பத்து விழுக்காடு இந்தியர்களின் வாக்குகள்தான் 3 மாநிலங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகின்றன.
மலாய்க்காரர்களின் வாக்குகள் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் என பிளவுப்பட்டு, சிதறும் பட்சத்தில் வாக்களிப்பு தினத்தன்று மிக குறைந்த விழுக்காட்டு அளவிலேயே சீனர்கள் வாக்களிக்கலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சியை செலுத்தப் போவது பக்காத்தான் ஹராப்பானா? பெரிக்காத்தான் நேஷனலா? என்பதை தீர்மானிக்கும் “கிங் மேக்கர்” ராக இந்தியர்கள் உள்ளனர் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 37 லட்சம் வாக்காளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 13.9 விழுக்காடாகும். பினாங்கில் 12 லட்சம் வாக்காளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 11.8 விழுக்காடாகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 8 லட்சத்து 64 ஆயிரத்து 425 வாக்காளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடாகும்.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 3 மாநிலங்களின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் பிரமாஸ்திரத்தை வைத்து இருப்பவர்கள் இந்தியர் வாக்காளர்களே என்று அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக பெரித்த ஹரியான் மலாய் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


