கோலாலம்பூர், அக்டோபர்.28-
2026 ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கீழ் செயல்படும் முழு உதவிப் பெற்ற பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெற்ற பள்ளிகள் அனைத்தும், 2026 கல்வி நாள்காட்டி ஆண்டு, ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
A பிரிவில் உள்ள மாநிலங்களின் பள்ளிகளுக்கு புதிய கல்வியாண்டு ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31 ஆம் தேதி நிறைவு பெறும். B பிரிவில் உள்ள மாநிலங்களின் பள்ளிகளுக்கு புதிய கல்வியாண்டு ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31 ஆம் தேதி நிறைபெறும் என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு நாள்காட்டியை கல்வியமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திலிருந்து பதிவேற்றம் செய்து செய்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகள் மற்றும் உயர்கல்விக்கழகங்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் எந்தவோர் இடையூறுமின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு புதிய கல்வியாண்டு மீண்டும் ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஃபாட்லீனா சீடேக் விளக்கம் அளித்தார்.








