May 22, 2026
Thisaigal NewsYouTube
மலையேறி தவறிய அறுவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மலையேறி தவறிய அறுவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

Share:

குவாலா பிலா, உலு பெண்டுல் அருகிலுள்ள குனூங் அங்சி -யில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு தொலைந்து போன ஆறு பேர் சுமார் 50 நிமிட தேடலுக்கு பிறகு பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஆறு பேரில் ஒரு பெண்ணின் இடது காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு, மீட்புபடை துறையின் துணை இயக்குநர் முகமது ஹபீஸ் முகமட் ஷெரீப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நான்கு பெண் உட்பட இரு ஆண்கள் இன்று நள்ளிரவு 12:05 மணியளவில் கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் காணப்பட்டதாகவும் அவர்கள் தொலைந்து போகாமல் சரியான பாதையில்தான் இருந்தார்கள் என்று முகமது ஹபீஸ் கூறினார்.

இருந்தபோதிலும் அந்நபர்கள் மலையேறி இறங்கும் பொழுது வழி தவறியதாகவும், மழையினாலும் சாப்பிட உணவுமின்றியும் அவர்கள் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டதாக முகமது ஹபீஸ் மேலும் விளக்கினார்.

Related News