கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
உரிமம் இல்லாமலேயே மக்கள் தங்கள் இல்லங்களில் வரி செலுத்தப்பட்ட 30 முதல் 40 பாட்டில்கள் வரை மதுபான வகைகளை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என்று மலேசிய சுங்கத்துறை அறிவித்துள்ளது.
வீடுகளில் சொந்த பயனீட்டுக்கு வாங்கி வைக்கப்படும் வரி செலுத்தப்பட்ட மதுபான வகைகளை வைத்திருப்பதற்கு அவர்கள் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் அந்த மாதுபான பாட்டில்கள் சொந்த பயனீட்டுக்கு மட்டுமே அனுதிக்கப்படுமே தவிர விற்பனைக்கு அல்ல என்று அந்த இலாகா விளக்கம் அளித்துள்ளது.








