லோரி ஓட்டுநர் ஒவருவரிடமிருந்து 800 வெள்ளி லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் அரசு ஊழியர்களான 3 சட்ட அமலாக்க அதிகாரிகளை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்தது.
சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் சம்மனிலிருந்து விடுப்படுவதற்கு அவரிடமிருந்து அந்த மூன்று அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக மேல் விசாரணையில் தெரிவந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் 35 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் முகமட் ஃபௌஸி ஹுசின் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


