மலேசியாவில் உள்ள விமானங்கள் தரையிறங்குவதற்கு இந்தியா அனுமதி மறுத்துள்ளதாகவும், இதனால் கோலாலம்பூரிலிருந்து இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமலும், சென்னையிலிருந்து மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமலும் அவதியுற்று வருவதாக உள்ளூர் ஓன்லைன் செய்தி தளத்தை மேற்கோள்காட்டி தற்போது சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி, பழைய காணொளியாகும் என்று நாட்டின் முன்னணி சுற்றுலா பயணி நிறுவனமான கிள்ளான் கேபிஎஸ் பயண நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி. சாமி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசியா உட்பட உலக நாடுகளில் கோவிட் 19 நோய்த் தொற்று பரவிய கால கட்டத்தில் மலேசிய விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்து இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் தாம் கருத்துரைத்த விஷயத்தை உள்ளடக்கிய பழைய காணொளி, தற்போது சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக கே.பி. சாமி தெரிவித்தார்.
அந்த செய்தியில் உண்மையில்லை. அது பழைய காணொளியாகும் என்று கே.பி.சாமி விளக்கம் தந்துள்ளார்.







