தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் சந்தாதாரர்களாக இருக்கும் இந்தியர்களின் சராசரி சேமிப்புத் தொகை 40 விழுக்காடு குறைந்துள்ளது. அவர்களின் சராசரி சேமிப்பு தொகை 25,700 வெள்ளியிலிருந்து 14,900 வெள்ளியாக குறைந்துள்ளது என்று இபிஎப்.பின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
பூமிபுத்ரா இபிஎப் சந்தாதாரர்களின் சராசரி சேமிப்புத் தொகை 70 விழுக்காடு குறைந்துள்ளது. இவர்களின் சேமிப்பு 15,500 வெள்ளியிலிருந்து 4,900 வெள்ளியாக சரிவு கண்டுள்ளது.
சீன சந்தாதாரர்களின் சராசரி சேமிப்புத் தொகை 1 விழுக்காடு குறைந்துள்ளது. 45,800 வெள்ளியிலிருந்து 45,200 வெள்ளியாக குறைந்துள்ளது என்று அமிர் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.








