Oct 7, 2026
Thisaigal NewsYouTube

பெண்கள் காலர் சட்டைகள் அணிவது கட்டாயமில்லை, அதைப் பிரச்னையாக்காதீர்- தியோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண்கள் காலர் சட்டைகள் அணிவது கட்டாயமில்லை, அதைப் பிரச்னையாக்காதீர்- தியோ

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

மக்களவை அமர்வின் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலர் சட்டைகளை அணிய வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்வி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் மன்ற விதிகளின்படி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய உடை, கை நீளம் அளவு கொண்ட ஆடை அல்லது முழங்கால் அளவிற்குக் குறையாத ஸ்கர்ட் அணிய வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காலர் சட்டைகளை அணிய வேண்டிய கட்டாயம் குறித்து குறிப்பிடவில்லை என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நோ சிங் கூறினார்.

மக்களவையில் விவாதிக்கக்கூடிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடைகளைப் பற்றி ஒரு பிரச்னையாக சில ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என தொடர்புத் துணையமைச்சருமான தியோ தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துல், இது போன்ற அவை நிலைக்குழு உத்தரவுக்கு முரணாக இல்லாத வரை, ஒரு பிரச்னையாக எழுப்பக்கூடாது என உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை மக்களவையில், சட்ட உதவி மற்றும் பொது பாதுகாப்பு மசோதா 2025 முடிவுக்குக் கொண்டு வரும் சமயத்தில், உலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட், பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்த்திருத்தம்) டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மானின் உடையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு