Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உலகை வியக்க வைத்த ஆறு வயது சிறுவன்: டி. தேவாக்‌ஷெனின் அசாத்திய சாதனை!
தற்போதைய செய்திகள்

உலகை வியக்க வைத்த ஆறு வயது சிறுவன்: டி. தேவாக்‌ஷெனின் அசாத்திய சாதனை!

Share:

சிரம்பான், ஜூலை.27-

மலேசியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தியுள்ளார் ஆறு வயது சிறுவன் டி. தேவாக்‌ஷென். வெறும் ஒரு நிமிடத்தில் 65 நாடுகளின் நாணயங்களை அடையாளம் கண்டு மலேசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்த இவர், அதை விட பிரமிக்க வைக்கும் வகையில் 11 நிமிடம் 45 வினாடிகளில் 200 நாடுகளின் நாணயங்களை நினைவில் வைத்து பிரிட்டிஷ் உலக சாதனையிலும் முத்திரை பதித்துள்ளார்.

ஒரு வயதிலேயே மலேசியக் கொடியை அடையாளம் கண்ட இவரது அசாத்திய ஞாபக சக்தி, பெற்றோர்களால் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்பட்டதாக தாய் தேவமலர் பெருமையுடன் தெரிவித்தார். இந்தச் சிறுவன் கின்னஸ் உலக சாதனைக்கும் தகுதி பெற வேண்டும் என்பதே குடும்பத்தினரின் இலக்கு.

Related News