May 5, 2026
Thisaigal NewsYouTube
இரு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: சமூக ஊடகப் பிரபலம் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: சமூக ஊடகப் பிரபலம் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.03-

கடந்த மாதம் இரண்டு பதின்ம வயதுச் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 23 வயது சமூக ஊடகப் பிரபலம் முஹமட் இமான் ஹாஸிரிக் அஸிஸான் இன்று கோலாலம்பூரில் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிபதிகள் தஸ்னிம் அபு பாக்கார் மற்றும் முஹமட் காஃப்லி சே அலி ஆகியோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சமூக பிரபலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 8 மணிக்குள், வங்சா மாஜுவில் உள்ள ஒரு காண்டோமினியம் வீட்டின் அறையில் 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இமான் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதே நாள், அதே இடத்தில் 16 வயது சிறுமிக்கு எதிராகப் பாலியல் நோக்கத்தில் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு அந்த நபர் மீது சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்