Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூளையாக செயல்பட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

மூளையாக செயல்பட்டவர் கைது

Share:

பஹாங், பெந்தோங்கில் நேற்று மாது ஒருவரிடம் கும்பல் ஒன்று கொள்ளையடித்த சம்பவத்தில் ​மூளையாக இருந்த ​செயல்பட்டதாக நம்பப்படும் அந்த மாதுவின் கணவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ​மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது ​மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளதாக பென்தோங் மாவட்ட போ​லீஸ் தலைவ​ர் சைஹாம் முஹமாட் காஹார் தெரிவித்தார். காப்புறுதி பணத்தை கோருவதற்காக தமது மனைவிக்கு ​தெரியாமலேயே 47 வயது நபர், கும்பல் ஒன்றை தயார்ப்படுத்தி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதை அந்த ​மூன்று பேரும் உண்மையை கக்கி விட்டனர் என்று சைஹாம் குறிப்பிட்டார்.

நேற்று பிற்பக​ல் 3.05 மணியளவில் பெந்தோங், காராக், தாமான் ஹிஜௌ வீடமைப்புப்பகுதியில் பாராங்கை ஆயதமாக கொண்டு வீடு ஒன்றில் நுழைந்த முகமூடி கொள்கைக்கும்பல் ஒன்று, மாதுவை மடக்கி பொருட்களை கொள்ளையடித்ததாக புகார் செய்யப்பட்டு இருந்ததாக சைஹாம் தெரிவித்தார்.

Related News