Oct 7, 2026
Thisaigal NewsYouTube

வீட்டுக் காவல் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீட்டுக் காவல் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சர் தகவல்

நாட்டில் வீட்டுக் காவலுக்கு உட்படுத்தப்படுவோருக்கான சிசிடிவி கண்காணிப்பு, மின்னணு கண்காணிப்பு சாதனம் பொருத்துதல் மற்றும் அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் தொடர்பான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் இதுவரை எந்த வீட்டுக் காவல் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், வீட்டுக் காவலை அனுமதிக்கும் புதிய சட்டம் இன்னும் இறுதி செய்யப்பட்டு, சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை முடியும் வரை சிறையில் வைப்பதற்கு மாற்றாக, குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பிணை கைதிகளை வீட்டுக் காவலுக்கு பரிசீலிக்க அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டுக் காவலுக்கான சட்டம், விதிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பின்னரே சிசிடிவி கண்காணிப்பு, மின்னணு கண்காணிப்பு சாதனங்களை அணிதல் மற்றும் பார்வையாளர்களுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் தீர்மானிக்கப்படும் என சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வீட்டுக் காவல் உத்தரவுகள் எத்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், வீட்டுக் காவலில் இருப்பவர்கள் சிசிடிவி கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்களா, மின்னணு கண்காணிப்பு சாதனங்களை அணிய வேண்டுமா, எந்த வகையான பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
குவாந்தானில் 19 வயது பாலிடெக்னிக் மாணவி மரணம்: பொறாமையே காரணம் என போலீசார் தகவல்

குவாந்தானில் 19 வயது பாலிடெக்னிக் மாணவி மரணம்: பொறாமையே காரணம் என போலீசார் தகவல்

 மோசமடையும் புகைமூட்ட நிலை - ஒரே இரவில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

மோசமடையும் புகைமூட்ட நிலை - ஒரே இரவில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

லாவோஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவில் இருந்து வரவில்லை - புக்கிட் அமான் உறுதி

லாவோஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 521 கிலோ போதைப்பொருள் மலேசியாவில் இருந்து வரவில்லை - புக்கிட் அமான் உறுதி

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்