Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தாய்லாந்து பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாய்லாந்து பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

பூச்சோங், ஜூன்.17-

தாய்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சோங், பூச்சோங் உத்தாமா இண்டஸ்டரியல் பார்க்கில் உள்ள ஒரு வர்த்தகத் தளத்தின் முன்புறம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணின் உடல் காலை 8.46 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

மருத்துவ அதிகாரிகள் சோதனையிட்டதில் அந்தப் பெண் ஏற்கனவே இறந்து விட்டார் என்று உறுதிப்படுத்தினர். அவரின் இறப்பைத் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சவப் பரிசோதனைக்காக சடலம், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →