Oct 16, 2026
Thisaigal NewsYouTube

2 அந்நியப் பிரஜைகளை கடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2 அந்நியப் பிரஜைகளை கடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், நவ. 22-


கடந்த வாரம் புதன்கிழமை இரண்டு அந்நிய நாட்டவர்களை கடத்தியதாக இரண்டு மியன்மார் பிரஜைகள் உட்பட நால்வர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதில் 40 வயது ஹட்ஸ்ரி அப்துல் ஹமிட் மற்றும் 41 வயது அஸ்ரி ஷரிஸால் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

27 வயது ஹபிசுர் ரஹ்மான் மற்றும் 38 வயது அப்துல்லா அபு ஜாமில் ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நால்வரும் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் செபராங் பிறை உத்தாரா, தெலுக் ஆயர் தாவாரில் உள்ள ஓர் எண்ணெய் நிலைய கட்டுமான வளாகத்தில் இரண்டு அந்நிய நாட்டவர்களை கடத்திச்சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →