Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக இரு பாகிஸ்தானிய ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக இரு பாகிஸ்தானிய ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.09-

கடந்த மாதம் தனது நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேரை நாட்டிற்குள் கடத்தி வந்ததாக இரண்டு பாகிஸ்தான் ஆடவர்கள், கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

27 வயது சஜாட் சையீட் அப்துல் மற்றும் 32 வயது ஹமீட் குல் மேஹ்ராப் என்ற அந்த இரு நபர்கள் நீதிபதி ஸுல்கிஃப்லி அபிலா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி மச்சாங்-கோல கிராய் சாலையில் டொயோட்டா அவான்ஸா வாகனத்தில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒன்பது பாகிஸ்தான் பிரஜைகளைக் கடத்தி வந்ததாக அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

Related News