மலேசிய சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன்ஸ் னின் தோற்றுநர் கோ ஹ்வான் ஹுவா மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நான்காவது நபரையும் போலீசார் கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் ரம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், இன்று அதிகாலையில் பங்சாரில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இத்துடன் மைஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தோற்றுநர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சட்டவிரோதப் பணமாற்று நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.








