குவாந்தான், ஜூலை.13
குவாந்தான் - கெமாமான் நெடுஞ்சாலையில், செராத்திங் அருகே உள்ள 35 ஆவது கிலோமீட்டரில், நேற்று நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் ஒரு தாப்பீர் பலியானது. சுமார் 150 முதல் 200 கிலோ எடையுள்ள இந்த தாப்பீர் , சாலையைக் கடக்க முயன்ற போது பெரோடுவா அல்ஸா வகை வாகனம் மோதியதில் உயிரிழந்தது.
வாகன ஓட்டுநருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாப்பீர், மார்டி செராத்திங் அக்ரோடெக்னோலோஜி பூங்காவிற்கு அழகு சேர்ப்பதுடன், அங்கு கூடாரம் அமைப்பவர்களுக்கு அடிக்கடி தென்படும் ஒரு பாதுகாக்கப்பட்ட விலங்கு என்பதால், இதன் இழப்பு விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








