ஜோகூர் பாரு, ஜூலை.30-
போதைப்பொருள் வைத்திருந்த தனது தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசாருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாகச் செம்பனைத் தோட்டக் குத்தகையாளர் ஒருவர் ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
34 வயது ஆர். ஜீவநாதன் என்ற அந்த நபர், நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் அரிஃபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ஜோகூர், சிகமாட், ஜாலான் சிகமாட்-குவாந்தான் சாலையில் நள்ளிரவு 12 மணியளவில் ஜீவநாதன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை ஜீவநாதன் மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.








