Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

Share:

கெந்திங் மலைக்குச் செல்லும் சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதோடு, வளைவுகளில் 'டிரிஃப்டிங்' (Drifting) செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைஹாம் கஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி 'டிக் டாக்' சமூக வலைதளத்தில் வைரலான 14 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

"அந்த வீடியோவில் ஓட்டுநர், காரை மிக அசூர வேகத்தில் ஓட்டிச் சென்றதோடு, பல வளைவுகளில் ஆபத்தான முறையில் காரை 'டிரிஃப்டிங்' செய்துள்ளார். இது மற்ற சாலைப் பயனாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தானாகவே முன்வந்து பெந்தோங் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் காரையும் அவர் கொண்டு வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதோடு, அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஜைஹாம் கஹார் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு