Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மின் மோட்டார் சைக்கிள் வாங்க பி40 தரப்பினருக்கு ஊக்கத் தொகை- அமைச்சு பரிந்துரை
தற்போதைய செய்திகள்

மின் மோட்டார் சைக்கிள் வாங்க பி40 தரப்பினருக்கு ஊக்கத் தொகை- அமைச்சு பரிந்துரை

Share:

மின்சார வாகனங்கள் குறிப்பாக மின்-மோட்டார் சைக்கிள்கள் வாங்குவதற்கு 2024 வரவு செலவுத் திட்டத்தில் ஊக்கத் தொகை வழங்குவது குறித்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு பிரிந்துரையை முன்வைத்துள்ளது.

நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தேச ஊக்கத்தொகை பரிந்துரை, குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக் கொண்டிருக்கும் என்று அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ ஹனாபி சக்ரி கூறினார்.

இவ்விவகாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மின் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு நிதி அமைச்சு ஆதரவளிக்கும் என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு நம்புகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News