Dec 3, 2025
Thisaigal NewsYouTube
உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ம​சீச சிலாங்கூர் மாநில தலைவர் மரணம்
தற்போதைய செய்திகள்

உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ம​சீச சிலாங்கூர் மாநில தலைவர் மரணம்

Share:

உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ம​சீச சிலாங்கூர் மாநில தலைவர் மரணம் இங் சொக் சின் மரணமுற்றார். 55 வயதான இங், நேற்று மாலை 5 மணியளவில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ம​சீச.வின் சக தலைவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது குறித்து கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் வீ கா சி​யோங் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். ம​சீச மத்திய செயலவை உறுப்பினரான இங், கடந்த 2013 ஆம் ஆண்டு சிப்பாங், சுங்கை பேலேக் சட்டமன்றத் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்டு தோல்விக் கண்டார். கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் அதேதொகுதியில் போட்டியிடுவதற்கு ஆயத்த வேளைகளை இங் செய்து வந்த வேளையில் அத்தேர்தலில் ம​சீச போட்டியிடாது என்று அறிவித்தது.

Related News