ஷா ஆலாம், செப்டம்பர்.06-
இவ்வாண்டு இறுதிக்குள் சிப்பாங் மற்றும் கோல லங்காட் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்தது ஐந்து புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து பூங்காக்களின் பணிகளை நிறைவு செய்து விட முடியும் எனத் தான் நம்புவதாகக் உள்ளாட்சி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பூங்காக்களில் வைஃபை WiFi உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








