Dec 2, 2025
Thisaigal NewsYouTube
டிங்கில் ரவி சுட்டுக்கொலை, நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

டிங்கில் ரவி சுட்டுக்கொலை, நால்வர் கைது

Share:

21 குற்றச் செயல்கள் பதிவைக் கொண்டிருந்த டிங்கில் ரவி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் நால்வரை கைது செய்துள்ளனர். கடந்த மே11 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கான், ஜாலான் பண்டார் 1, இல் எவரிடே ஃபூட் கோர்ட் அருகில் ஓர் உணவகத்தில் உணவு அருந்தி விட்டு, நண்பர்களுடன் காரை நோக்கி டிங்கில் ரவி சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

போக்கா மற்றும் சொஸ்மா போன்ற கடும் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனையை அனுபவித்தவரான டிங்கில் ரவி கொலை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் நான்கு நபர்கள் கின்ராரா பகுதியில் பிடிபட்டனர்.

விசாணைக்கு ஏதுவாக அந்த நான்கு நபர்களையும் வரும் மே 18 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

Related News