Aug 16, 2026
Thisaigal NewsYouTube
சீன பிரஜைகள் ஸ்கேம் மோசடி: நீதிமன்றத்தில் ஒன்பது பேர் மறுப்பு
தற்போதைய செய்திகள்

சீன பிரஜைகள் ஸ்கேம் மோசடி: நீதிமன்றத்தில் ஒன்பது பேர் மறுப்பு

Share:

சீன நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் லவ் ஸ்கேம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பினாங்கு பாலிக் புலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சம்பவத்தன்று பினாங் பயான் லெபாஸ், சுங்கை நிபோங் கெச்சில் இல் உள்ள ஒரு ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் இந்தச் சட்டவிரோதச் செயல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கைதான ஒன்பது பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிபதி சியா ஹூய் டிங் முன்னிலையில் வாதிட்டனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் பிரிவு 420 மற்றும் பிரிவு 120பி(1) கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும் தலா RM8,000 பிணையும் இரண்டு உள்நாட்டு ஜாமீன்தாரர்களை நிபந்தனையாக விதித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related News