கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
இந்த ஆண்டு இறுதிக்குள் 13 மில்லியன் பயனர்கள் மைடிஜிட்டல் ஐடிக்குத் தங்களைப் பதிவுச் செய்து கொள்வார்கள் என்று தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
1959 ஆம் ஆண்டு தேசியப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது மூலம் மைடிஜிட்டல் ஐடி பயன்படுத்தப்படுவதை நோக்கி அரசாங்கம் நகர்கிறது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து விளக்கம் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் துறையின் அனைத்து பரிவர்த்தனைகளிலும் மைடிஜிட்டல் ஐடி பயன்படுத்துப்படுவதைச் செயல்படுத்துவே இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் மைடிஜிட்டல் ஐடி பயன்படுத்தப்படுவதை வங்கி, காப்புறுதி உட்பட அனைத்து துறையினரும் அங்கீகரிப்பதை இந்தச் சட்டம் உறுதிச் செய்யும் என்று அவர் விளக்கினார்.








