Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மேற்காசியப் போர் பதற்றம்: அமைதி திரும்ப பிரதமர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

மேற்காசியப் போர் பதற்றம்: அமைதி திரும்ப பிரதமர் அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள்

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மேற்காசியாவில் நிலவி வரும் தீவிரமான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் மலேசியா தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதோடு, அப்பகுதியில் விரைவில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானிய உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் இடையே நேரடித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ஈரானியப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்க ஆயுதப் படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால் அங்கு போர்ச் சூழல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் பதற்றமான சூழ்நிலையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவ்வட்டாரத்தில் மீண்டும் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் என மலேசியா பிரார்த்திப்பதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு