கோலாலம்பூர், செப்டம்பர்.30-
வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இருக்கையுடன் பொருத்திக் கொள்ளக்கூடிய டிஆர்எஸ் நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை தாம் வலியுறுத்திய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, வாகனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு டிஆர்எஸ் நாற்காலிகளைப் பொருத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து அமைச்சு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அமைச்சர் என்ற முறையில் நாங்கள் எதைச் சொன்னாலும், மக்கள் குறை கூறவே செய்வர். பரவாயில்லை. சகித்துக் கொள்கிறோம். மக்கள் தூற்றினாலும், வசைப்பாடினாலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று அந்தோணி தெரிவித்தார்.








