Oct 17, 2026
Thisaigal NewsYouTube

அந்த பத்து லட்சம் வெள்ளி கண்டு பிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த பத்து லட்சம் வெள்ளி கண்டு பிடிக்கப்பட்டது

பெட்டாலிங்ஜெயா, நவ.7-


அம்பாங்கில் உள்ள ஒரு முன்னணி பேரங்காடி மையத்திற்கு சொந்தமான, காணாமல் போனதாக கூறப்பட்ட பத்து லட்சம் வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் டத்தோ சசிகலா தேவி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அந்த பெரும் தொகை காணாமல் போன அன்றைய தினமே கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.

எனினும் அந்தப் பணம் காணாமல் போனது தொடர்பாக கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Ampang – Kuala Lumpur மேம்பால சாலையான Akleh- வை நோக்கி செல்லும் ஜாலான் உலு கிள்ளான் சாலையில் அந்தப்பணப்பை கண்டு பிடிக்கப்பட்டது.

பேரங்காடி மையத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற பாதுகாவலர் வேன் திரும்பும் போது அந்தப் பணம் சாலையில் கீழே விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →