பிரதமர் அன்வாருக்கு நினைவுப்படுத்தினார் துன் மகாதீர்
தாம் பிரதமராக பதவி வகித்த காலத்தில், பெரும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டியிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பகிரங்க மன்னிப்பு கேட்பதற்கு, தாம் நிர்ணயித்திருந்த காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைவதாக துன் மகாதீர் நினைவுப்படுத்தியுள்ளார்.
தம்மிடம் மன்னிப்பு கேட்க அன்வார் தவறுவாரேயானால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்று துன் மகாதீர் எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் பி.கே.ஆர். கட்சியின் சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் அன்வார், தம் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறி அவருக்கு எதிராக வழக்கறிஞர் நோட்டீஸை துன் மகாதீர் அனுப்பியுள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டை மீட்டுக்கொண்டு தன்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதற்கு இன்று ஏப்ரல் 17 ஆம் தேதியைக் காலக்கெடுவாக துன் மகாதீர் நிர்ணயித்திருந்தார்.








