புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.24-
கடந்த அக்டேபார் 18 ஆம் தேதி சனிக்கிழமை பினாங்கு, ஜுருவில் உள்ள ஒரு வீட்டில் தாயாரும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Kampung Sekolah Juru-வில் நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு நபர்கள், கெடா கூலிமிலும், ஒருவர் சிலாங்கூரிலும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.
30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவரும் நாளை அக்டோபர் 25 ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுத்து வைக்கப்படுவதற்கான அனுமதியைப் போலீசார் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கொலை தொடர்பில் உயிரிழந்த மாதுவின் 57 வயது கணவரும் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக டத்தோ அஸிஸீ விளக்கினார்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட் ஆயுதம் வீட்டிற்கு பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுடன், இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.








