கோலாலம்பூர், அக்டோபர்.23-
வரும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 -ஆம் தேதி வரையில், போக்குவரத்து சம்மன்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க பிடிஆர்எம் முடிவெடுத்திருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் நிலுவையில் உள்ள போக்குவரத்து சம்மன்கள் மொத்தம் 6.6 பில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சலுகைகளுக்கு மக்கள் வரவேற்பு அளிக்கும் பட்சத்தில், நிலுவையிலுள்ள சம்மன்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.
இச்சலுகைகள், 2026-ஆம் ஆண்டில், அமலுக்கு வரவுள்ள, புதிய சம்மன் கட்டண முறைக்கு முன்னர், மேற்கொள்ளப்படும் கடைசி முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








