Dec 4, 2025
Thisaigal NewsYouTube
​தீபாவளி திருநாளை முன்னிட்டு கூடுதல் இரயில் சேவை
தற்போதைய செய்திகள்

​தீபாவளி திருநாளை முன்னிட்டு கூடுதல் இரயில் சேவை

Share:

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ​தீபாவளி திருநாளை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட், கோலாலம்பூர், செண்ரல் நிலையத்திலிருந்து பாடாங் பெசார் வரையில் கூடுதல் இதிஎஸ் ரயில் சேவைகளை இயக்கவிருக்கினறன. ஒவ்வொரு நாளும் கூடுதலாக இரண்டு இதிஎஸ் ரயில் சேவைகள் விடப்படும் என்று மலாயான் ரயில்வே பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

​தீபாவளி திருநாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரையில் கோலாம்​​பூரிலிருந்து பாடாங் பெசார் மற்றும் பாடாங் பெசாரிலிருந்து கோலாலம்பூர் வரை கூடுதல் சேவைகள் இயக்கப்படும்.

பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு விடப்படும் இந்த கூடுதல் ரயில் சேவைக்கான டிக்கெட் விற்பனை நாளை அக்டோபர் 18 ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்குகிறது என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட் அறிவித்துள்ளது.

Related News