Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மித்ரா புதிய தலைவருக்கு வாழ்த்துகள்
தற்போதைய செய்திகள்

மித்ரா புதிய தலைவருக்கு வாழ்த்துகள்

Share:

இந்தியர்கள் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் புதிய தலைவராக பத்து எம்.பி. பி.பிரபாகரன் நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் செதப்பா ஜாலான் கெந்திங், கெலாங்கை சேர்ந்த ஶ்ரீ ஐயனாரீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் டத்தோ சி.பெருமாள், துணைத்தலைவர் நூக்குராஜு, நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மலேசிய பெலித்தா இன்சான் சமூகநல அமைப்பின் தலைவர் ந.ஶ்ரீதரன் ஆகியோர் பத்து எம்.பி யின் சேவை மையத்திற்கு வருகை புரிந்து பி.பிராபகரனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்ததுடன் தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் எம்.பி பிரபாகரனின் பிறந்தநாள் கேக்க்கும் வெட்டப்பட்டு வாழ்த்துகள் கூறப்பட்டன.

Related News