கோலா திரங்காணு,ஜூலை 21-
ரி.ம 250 வெள்ளியைக் கையூட்டாக போலீசுக்கு வழங்கிய குற்றத்திற்காக 27 வயது மியன்மார் பிரஜை Mohammad Shakir Mohammad Zokoria ரி.ம 5000 வெள்ளியை அபதாரமாக கோலா திரங்காணு Sesyen நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
லைசன்ஸ் இல்லாமல் சாலை ஓரத்தில் பழைய ஆடைகளை விற்கும் வியாபரம் நடத்தும் அந்த மியன்மார் பிரஜையை, போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக இன்ஸ்பெக்டர் பதவி கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரி.ம 250 வெள்ளி பணத்தைக் கையூட்டாக கொடுத்த குற்றத்திற்காக இவருக்கு இந்த அபதாரம் நீதிபதி Norashima Khalid வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








