Aug 12, 2026
Thisaigal NewsYouTube
டத்தோஸ்ரீ அன்வார் நாளை சிங்கப்பூர் செல்கிறார்
தற்போதைய செய்திகள்

டத்தோஸ்ரீ அன்வார் நாளை சிங்கப்பூர் செல்கிறார்

Share:

கோலாலம்பூர், மே.30-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மே 31 ஆம் தேதி சிங்கப்பூருக்கு அலுவல் பயணம் மேற்கொள்கிறார்.

22 ஆவது அனைத்துலக வியூக ஆய்வுக் கழகமான ஐஐஎஸ்எஸ் – ஷங்ரி– லா 2025 ஆம் ஆண்டு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் போது வருடாந்திரக் கலந்துரையாடலில் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் உலகளாவிய பாதுகாப்புச் சவால்களைப் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வாரின் இந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் அன்வார் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

தவிர சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் மரியாதை நிமித்தமாக அன்வார் சந்திக்க உள்ளார்.

Related News