Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!
தற்போதைய செய்திகள்

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

Share:

பினாங்கின் புகழ்பெற்ற 'புலாவ் காசும்போ' தீவு, கூகுள் வரைப்பட செயலியில் திடீரென 'புலாவ் ஸ்ரீ அமான்' என்று பெயர் மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' என்றும், அதன் அருகில் உள்ள ஒரு மணல்திட்டு 'புலாவ் ஸ்ரீ முட்டியாரா' என்றும் கூகுள் வரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்ட மாற்றமா என்பது குறித்து மாநில அரசுக்குத் தகவல் இல்லை.

விடுமுறை நாள் என்பதால், இந்தத் தீவுகள் புதிய பெயரில் எவ்வாறு பட்டியலிடப்பட்டன என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று தொடர்பு கொள்ளப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பினாங்கு பாலம் கட்டப்பட்டபோது ஏற்பட்ட மணல் குவிப்பால் 1983-1986 காலகட்டத்தில் இந்தச் செயற்கைத் தீவு உருவானது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கடல்சார் உயிரியலாளர்களால் இதற்கு 'காசும்போ' என்று பெயரிடப்பட்டது.

Related News