Jan 16, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவத் தளபதி வீட்டிலிருந்து 11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதி வீட்டிலிருந்து 11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.16-

இராணுவக் கொள்முதல் தொடர்பான டெண்டர்களில் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியின் வீட்டிலிருந்து, 11.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திரங்கானு மற்றும் கோலாலம்பூரில் அமைந்துள்ள அவ்வீடுகளில் இருந்து 4.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கத் தொகை, 2.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர வாட்சுகள், 3.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆபரணங்கள் மற்றும் 3 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

மேலும், 32.5 மில்லியன் ரிங்கிட் நிதிகளைக் கொண்ட 75 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இவ்விசாரணைகள் தொடர்பாக இதுவரை 23 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்மை குற்றங்களுக்காக 22 விசாரணை ஆவணங்களும், பண மோசடிக் குற்றத்திற்காக ஒரு விசாரணை ஆவணமும் திறக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News