Nov 24, 2026
Thisaigal NewsYouTube

நான்கு ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் அன்வார்! நாட்டைச் சீரமைக்கத் தொடரும் பயணம் – மக்களின் வாழ்வே முன்னுரிமை என உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நான்கு ஆண்டுகள் பிரதமர் பொறுப்பில் அன்வார்! நாட்டைச் சீரமைக்கத் தொடரும் பயணம் – மக்களின் வாழ்வே முன்னுரிமை என உறுதி

நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் தமது அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்துள்ளார்.

மலேசியாவின் 10ஆவது பிரதமராக 2022 நவம்பர் 24ஆம் தேதி பதவியேற்ற டத்தோ ஸ்ரீ அன்வார், இன்று வெளியிட்டுள்ள நான்காண்டு காலப் பயணக் குறிப்பில், பதவியேற்றபோது நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்தின் நிதி வரம்புகள், வாழ்க்கைச் செலவு உயர்வு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் ஊழல் ஆகியவை அப்போது நாட்டின் முக்கியச் சவால்களாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே நாட்டை மீட்டெடுப்பதையும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு, அரச நிர்வாகம் மேம்படுத்தப்பட்டு, நிறுவனச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், மக்களின் நலத்திட்டங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து, வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட்டு, பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதில்தான் அடங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, வழங்கிய ஆதரவு, தெரிவித்த விமர்சனங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அன்வார், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பைத் தொடர்ந்து முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

பிரதமர்கள் பதவிக்கு வரலாம், போகலாம்; ஆனால் மக்களின் நலனும் நாட்டின் மாண்பும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் அன்வார் தமது முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பேரா மாநில வரலாற்றிலேயே மிக அதிகமாக 1.693 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட் தாக்கல்

பேரா மாநில வரலாற்றிலேயே மிக அதிகமாக 1.693 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட் தாக்கல்

கல்குவாரியில் இரும்புக் கம்பி அறுந்து தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி: முறையான விசாரணை கோரி குடும்பத்தினர் புகார்

கல்குவாரியில் இரும்புக் கம்பி அறுந்து தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி: முறையான விசாரணை கோரி குடும்பத்தினர் புகார்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

நஜிப்பின் வீட்டுக் காவல் உத்தரவை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியாது – சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

மூன்று உணவகங்களை மிரட்டி சேதப்படுத்திய வழக்கில் 8 பேர் கைது

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

2027ஆம் ஆண்டுக்கு பேராக் மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய 1.693 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டம் தாக்கல்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்

கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்கத் துறையின் புதிய தலைவராக சுஃபியான் அப்துல்லா நியமனம்