Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எஸ் பி ஆர் எம் விசாரணைக்கு இன்னும் அளாகவில்லை
தற்போதைய செய்திகள்

எஸ் பி ஆர் எம் விசாரணைக்கு இன்னும் அளாகவில்லை

Share:

கெடா மாநிலத்தில் அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்னும் தம்மை விசாரிக்கவில்லை என்று மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எஸ் பி ஆர் எம் விசாரணை செய்கிறது என்பதை தகவல் சாதனங்களின் வாயிலாக தாம் அறிந்த கொண்டதாக சனூசி குறிப்பிட்டார். தாம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக சதிவேலைகள் பின்னப்பட்டு வருவதாக சனூசி குற்றஞ்சாட்டினார்.

Related News