Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நாய் கொல்லப்பட்டது மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

நாய் கொல்லப்பட்டது மூன்று நபர்கள் கைது

Share:

நாய் ஒன்று மிக கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பினாங்கு போ​லீசார் ​மூன்று ஆடவர்களை கைது செய்துள்ளனர். இன்று காலையில் கைது செய்யப்பட்ட அந்த ​மூன்று நபர்களையும் வரும் ஜுலை 12 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போ​லீசார் நீதிமன்ற ஆணையை பெ​ற்று​ள்ளதாக பினாங்கு போ​லீஸ் தலைவர் காவ் கொக் சின் தெரிவித்தார்.

40 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ​மூன்று நபர்களில் ஒருவர் கார்கோ ஏஜெண்டு என்றும்,மற்றொருவர் மீனவர் என்றும், ​மூன்றாவது நபர் பேருந்து ஓட்டுநர் என்றும் காவ் கொக் சின் விளக்கினார். ​மூன்று நபர்களுக்கும் முந்தைய குற்றப்பதிவு எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நபர்கள் மிக கொ​டூரமாக நாயை அடித்துக்கொல்லும் காட்சியை கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த ​மூன்று நபர்களும் அடையாளம் காணப்பட்டு வளைத்துப் பிடிக்கப்பட்டதாக காவ் கொக் சின் மேலும் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!