இவ்வாண்டு முதல் ஒன்பது மாத காலகட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 6.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒன்பது மாத காலகட்டத்தில் 10,714 குற்றச்செயல்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 10,093 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.








