Oct 17, 2026
Thisaigal NewsYouTube

விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பு

கோலாலம்பூர், நவ.5-


கடந்த அக்டோபர் முதல் தேதி, கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட அந்த மாதுவிற்கு சொந்தமான நகைகளை திருடியதாக நம்பப்படும் நான்கு போலீஸ்கார்கள் தொடர்புடைய விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த நான்கு போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா Isa தெரிவித்தார்.

சட்டத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் சட்டப்பிரிவிடம் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த நால்வரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக அவர்கள் கடமையாற்றுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →